Thursday, 17 January 2013

பீஜே வணங்கி என்று சொல்லலாமா


நபி(ஸல்) அவர்கள் வியாபரம் தடை செய்த ஒன்றை அதை கூடும் என பத்வா கொடுக்கிறார்கள்,
ஹதிஸை பற்றி எந்த ஞானமும் இல்லாமல் எல்லாம் தெரிந்தது போல் மார்க்கத்தில்
இல்லாதத்தை புகுத்தியுள்ளார்கள்.இவர்களின் முனாபிக் தனத்தை இன்னும் நீங்கள்
அறியாமல் மூடர்களாக உள்ளீர்கள்,


நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்
மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை
செய்துள்ளனர்!" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே!
செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம்
மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப்
பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது!
அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை
சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை
உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!" என்று கூறினார்கள் என ஜாபிர் இப்னு
அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள் (இமாம் புஹாரி(ரஹ்)

இதில் தெள்ள தெளிவாக பன்றியை வியாபரம் செய்யக் கூடாது என தெளிவாக
அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் முனாபிக் பிஜே, பன்றியின் தோல் வியாபரம் செய்யலாம்
எனப் பத்வா வழங்கியுள்ளார., அதுவும் சரி என நம்பும் அவர்களின் கண்மூடித்தனமான கூட்டம்,

பன்றியே வியாபரம் செய்ய தடுக்கப்பட்டிருக்கும் போது பன்றியுள்ள தோல் மட்டும் எவ்வாறு
வியாபரம் செய்ய முடியும்.பன்றி உள்ள எதையும் விற்பனை செய்யக் கூடாது எனத் தெளிவாக
கூறப்பட்ட பின்னர் ஆனால் முனாபிக் பீஜே அதை வியாபரம் செய்யலாம் என்பது எந்த
வகையில் நியாயம்,அறிவுடையோருக்கு விடை கிடைக்கும்


ஆனால் பீஜே அன்று:

பீஜேவே, பன்றியும்,பன்றியில் உள்ள எல்லா பாகமும் ஹராம் எனக் கூறும் வீடியோவை கீழ்
உள்ள லிங்க் கிளிக் செய்து பார்க்கவும், பார்க்கவும் வீடியோ நேரம் 5:10 வினாடிகளிலிருந்து....





ஆனால் அவரின் பத்வாவுக்கு எதிராக அவரே தற்போது பன்றியின் தோல் ஹலால் எனக் கூறும்
பத்வாவை அவரது இணையத் தளத்தில் காணுங்கள்:
http://onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/panri_thol_viyabaram/

பன்றியின் இரத்தம் ஹலால் எனும் பத்வா பார்க்க:
http://www.youtube.com/watch?v=mOkEC5vlNQs

தற்போது அறிவீர்கள் பீஜே ஒரு மாபெரும் பொய்யன் என்று


மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறனார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : அஹ்மது (1797)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தோல் பதனிடப்பட்டுவிட்டால்
தூய்மை அடைந்துவிடும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (596)

நமது பதில்:

இதறகு முன் உள்ள ஹதிஸை மறுத்து வெளியிட்டுள்ளார்கள்,,நபி(ஸல்) அவர்கள் செத்த
ஆடுக்கு விதிவிலக்கு கொடுத்தார்கள், கிழே உள்ள ஹதிஸை தெளிவாக படித்திற்கள் என்றால்
உங்களுக்கு நன்றாக புரியும், எப்படி மார்க்கத்தில் விளையாடுகின்றார்கள் என்பதை
கண்டறியுங்கள்.

(என் சிறிய தாயார்) மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்குரிய ஆடு ஒன்று
(செத்துவிட்டது. அது) கிடந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து
சென்றார்கள். அப்போது நீங்கள் இதன் தோலால் பயனைடயக் கூடாதா? என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தோல் பதனிடப்பட்டுவிட்டால் தூய்மை
அடைந்துவிடும்.
இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இமாம் முஸ்லிம்(ரஹ்,
இமாம் புஹாரி(ரஹ்))

மேல் உள்ள இந்த ஹதிஸை மறைத்து அதற்கு பின் உள்ள ஹதிஸின் பகுதியை மட்டும்
மறைத்து கூறியுள்ளார்கள். இது இவர்களுக்கு புதியதல்ல


மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

பதனிடப்பட்ட எல்லா தோல்களும் தூய்மையானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : பைஹகீ (64) பாடம் (தூய்மை)

நமது பதில்:

இதில் எல்லா என்ற வார்த்தை வந்துள்ளதால் அது பன்றியும் பொருந்தும் எனக் கூறுகின்றார்கள்,
அதனால் அது வியாபரம் செய்யலாம் எனக் கூறும் சொல், இது இவர்களின் அறியாமை வாதம்
ஆகும்.

இதற்கு ஒரு உதாரணம் சொன்ன உங்களுக்கு நன்றாக புரியும்,

நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாவை திக்ரு செய்பவர்களாக இருந்தார்கள்
என ஆயிசா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்( இமாம் முஸ்லிம்(ரஹ்)).

இதில் வெளிப்படையாக பார்க்கும் போது நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் திக்ரு
செய்வார்கள் எனப் பொருள் கிடைக்கும் ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு அது
தூய்மையான நிலையில் தவிர வேறெந்த நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்வதை
நான் வெறுக்கிறேன் என மற்றொரு வழியில் நிருபிக்கப்பட்டுள்ளது

சிறு நீர் கழித்து கொண்டு இருக்கும் போது நபி(ஸல்) அவர்களுக்கு, முஜாஹிர் பின் குன்ஃபுது(ரலி)
அவர்கள் ஸலாம் சொன்னார்கள், அதற்கு நபியவர்கள் மறுமொழி கூறவில்லை, பிறகு உளு
செய்து விட்டு மறு மொழி கூறினார்கள்.

தூய்மையான நிலையில் தவிர (வேறு எந்த நிலைகளிலும்) அல்லாவை திக்ர் செய்வதை நான்
வெறுக்கிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஹாஜிர் பின் குன்புத்(ரலி) அறிவிக்கிறார்கள்
இமாம் அபுதாவுத்(ரஹ்)(16),இமாம் இப்னுமஜா(ரஹ்)(344),இமாம் நஸயி(ரஹ்) (38),இமாம்
முஸ்னத் அஹ்மது(ரஹ்)(18259,19833), இமாம் தாரமீ(ரஹ்) (2527) இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்),
இமாம் பைஹகி(ரஹ்),இமாம் ஹாகிம்(ரஹ்).

இமாம் ஸிந்தி(ரஹ்) அவர்களின் விளக்கம்:

ஸலாம் கூறுவதற்கு உளு தேவையில்லை என்றாலும், ஸலாம் என்பது அல்லாவின்
பெயர்களும் ஒன்றாக இருப்பதால் தூய்மை அடைந்த நிலையில் பதில் சொன்னார்கள்.

இதிலிருந்து,

எல்லா நிலை என்பது நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையில் திக்ரு செய்வார்கள் ஆனால் அவர்கள் தூய்மையான நிலையில் இருப்பார்கள்,

அதே போல் இதில் எல்லா தோல் எனக் கூறப்பட்டாலும் அது பன்றியை தோல் தவிர, ஏனென்றால்
ஹரமான பன்றியை விற்பனைச் செய்யகூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள போது
பன்றித் தோல் மட்டும் எவ்வாறு வியாபரம் செய்ய முடியும். பன்றித் தோல், பன்றியில் இல்லை
எனக் கூறமுடியமா? அது எவ்வாறு வியாபரத்திற்கு பொருந்தும்.

எனவே பன்றியும், பன்றித்தோலும், பன்றியில் உள்ள எந்த பாகமும் வியாபரத்திற்கு கூடாது.

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...