Saturday, 5 January 2013

மரணப்பட்டவர்களிடம் நமக்காக துவா கேளுங்கள் எனக்கேட்பதோ ஆகுமா?

கேள்வி:

Mohammed Ismail
மையத்து மற்றும் மரணப்பட்டவர்களுக்காக
துவா கேட்பதோ அல்லது மரணப்பட்டவர்களிடம்
நமக்காக துவா கேளுங்கள்
எனக்கேட்பதோ ஆகுமா?

பதில்.......

Ahlussunnah Val Jama'ah

முதல் கேள்வி மரணப்பட்டவர்களுக்காக
துவா கேட்பதை பற்றியது.

بَابُ مَا يَلْحَقُ الْإِنْسَانَ مِنَ الثَّوَابِ بَعْدَ وَفَاتِهِ

மரணத்திற்க்கு பின்பு நன்மைகள் மனிதனுக்கு சேர்த்து வைப்பதின் பாடம்.

இந்த பாடத்தில் இமாம் முஸ்லிம் ரஹி அவர்கள் தன்னுடைய ஸஹீஹ் முஸ்லிமில் கொண்டுவரும் ஒரு ஹதீஸ்

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ يَعْنِي ابْنَ سَعِيدٍ، وَابْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ هُوَ ابْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ "

ஒருவன் மரணித்தால் அவன் அனைத்து அமல்களும் துண்டிக்கப்பட்டுவிடும் முன்று அமல்களை தவிர 

1, நிலையான தர்மங்கள்,
2, பயனளிக்கப்பட்ட கல்வி,
3, அவருக்காக துஆ செய்யும் நல்ல பிள்ளைகள்,

முஸ்லிம்-1631

எனவே மரணித்தவர்களுக்காக துஆ செய்யலாம். இது போன்ற ஆதாரங்கள் ஏராளம் உள்ளன.

இரண்டாவது கேள்வி மரணப்பட்டவர்களிடம்
நமக்காக துவா கேளுங்கள்
எனக்கேட்பது ஆகுமா?

உயிருடண் இருக்கும் ஒருவரிடத்தில் நாம் துஆ கேட்க்க கூறுகிறோம் அவர் நமக்காக துஆ கேட்க்கிறார். ஏன் என்றால் அவர் உயிருடன் இருக்கிறார். நபிமார்கள், ஷூஹதாக்கள் மண்ணறையில் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.எனவே நபிமார்கள், ஷூஹதாக்கள் போன்றவர்களிடம் நமக்காக துவா கேளுங்கள் எனக்கேட்பது கூடும். 

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ 3-169

அல்லாவின் பாதையில் கொலை செய்யப்பட்டவர்கள் மரணித்தவர் என்று எண்ணாதீர்கள். அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அல்லஹ்விடத்தில் உணவுகள் வழங்கப்படுகிறது.

மரணித்த ஒருவரிடம் நாம் நமக்காக துஆ செய்யுங்கள் என்று கூறினால் அவர் நமக்காக துஆ செய்வாரா இல்லையா என்பதை நாம் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பார்க்கும் போது அந்த ஆற்றலை அல்லாஹ் அவன் நாடியவருக்கு வழங்கி இருக்கிறான்.

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا 
4-64

அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்து உங்களிடம் வருகை தந்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரி ரசூலும் அவர்களுக்க பிழை பொறுப்பு தேடினால் நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாக கருணையாளனாக அடைந்து கொள்வார்கள். 4 - 64

பாவம் செய்தவர் நாயகத்தை அணுகுவதற்க்கு அல்லாஹ் கூறுகிறான் இந்நிலை வழும் காலத்தில் மட்டுமல்ல மரணித்த பின்னாலும்தான் என்று அதிகமான விரிவுரையாளர்கள் கூறியுள்ளார்கள் குறிப்பாக இப்னு கஸீர் ரஹ் அர்கள் கூறுகிறார்.

وَقَدْ ذَكَرَ جَمَاعَةٌ مِنْهُمْ: الشَّيْخُ أَبُو نَصْرِ بْنُ الصَّبَّاغِ فِي كِتَابِهِ "الشَّامِلِ" الْحِكَايَةَ الْمَشْهُورَةَ عَنْ العُتْبي،قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ: السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ، سَمِعْتُ اللَّهَ يقول: {وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا} وَقَدْ جِئْتُكَ مُسْتَغْفِرًا لِذَنْبِي مُسْتَشْفِعًا بِكَ إِلَى رَبِّي ثُمَّ أَنْشَأَ يَقُولُ:
يَا خيرَ مَنْ دُفنَت بِالْقَاعِ (1) أعظُمُه ... فَطَابَ منْ طِيبِهِنَّ القاعُ والأكَمُ ...
نَفْسي الفداءُ لقبرٍ أَنْتَ ساكنُه ... فِيهِ العفافُ وَفِيهِ الجودُ والكرمُ ...
ثُمَّ انْصَرَفَ الْأَعْرَابِيُّ فَغَلَبَتْنِي عَيْنِي، فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّوْمِ فَقَالَ: يَا عُتْبى، الحقْ الْأَعْرَابِيَّ فَبَشِّرْهُ أَنَّ اللَّهَ قَدْ غَفَرَ له (2) .

ஒருமனிதர் ரஸூல் ஸல் அவர்களுடைய கப்றுக்கு வந்து மேல் குறிப்பிட்ட ஆயத்தை ஓதி எனது பாவம் மன்னிப்பதற்க்காக அல்லஹ்விடத்தில் பரிந்துரை செய்ய உங்களிடம் கேட்கிறோன் என்று சென்ன நிகழ்வை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் இப்னுகஸீரில் உள்ள செய்தியாகும். நாமாகஎதுவும் சொல்வது இல்லை.

எனவே மரணித்த நாயகத்திடம் துஆ கேட்பதற்க்காக சொல்வது தவரில்லை. 
மறுப்புகள் எழுதுபவர் ஆதாரமாக எழுதவும்.

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...