Saturday, 5 January 2013

இஸ்லாத்திற்க்காக ஆர்பாட்டம், பெண்களா?

இஸ்லாத்திற்க்காக ஆர்பாட்டம், போராட்டம், மறியல். இஸ்லாமியர்களுக்காக சாலையோரத்தில் குரல் கொடுக்கும் இவர்கள்தான் உன்மையான இஸ்லாமியப் பெண்களா? இறைவழிபாட்டிற்காக இறைஇல்லத்திற்க்கு வருகைதரும் பெண்களா? மேடை ஏறி இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பெண்களா? தெலைக்காட்சியில் ஓய்வின்றி பிரசங்கம் செய்யும் பெண்களா? அல்லது இஸ்லாமியப் பெண்களுக்காக உரிமைகுரல் எழுப்பும் தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்களா? யார்தான் உண்மையான இஸ்லாமியப் பெண்கள். குர்ஆன் ஹதீஸை அலசுவோமா? வாருங்கள். 
குர்ஆன் கூறுகிறது......... 

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا (33:33)

( நபியின் மனைவியரே!) உங்களுடைய வீடுகளிலேயே நீங்கள் தங்கியிருங்கள். முந்திய அறியாமைக் காலத்தில் வெளியில் சுற்றியது போல் நீங்கள் வெளியில் சுற்றாதீர்கள். தொழுகையைக் கடைபிடியுங்கள் ஜகாத்தைக் கொடுங்கள். அல்லாஹுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் )பாவ( அசுத்ததை அவன் போக்குவதற்க்கவும், உங்களை முற்றிலும் அவன் பரிசுத்தமாக்குவதற்க்கவும். (33:33)
மேர்கூறப்பட்ட இந்த வசனத்தில் அல்லாஹ் உண்மையான இஸ்லாமியப் பெண்களின் முக்கியமான மூன்று தன்மையைப் பற்றி கூறுகிறான். 

அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருப்பார்கள், 
தொழுகையை நிறைவேற்றுவார்கள், 
அல்லாஹுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பார்கள், 

மேற்கூறப்பட்ட வசனத்தின் விரிவுரையில் தப்ஸீர் குர்துபியில்............

قَالَ ابْنُ عَطِيَّةَ: بُكَاءُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا إِنَّمَا كَانَ بِسَبَبِ سَفَرِهَا أَيَّامَ الْجَمَلِ، وَحِينَئِذٍ قَالَ لَهَا عَمَّارٌ: إِنَّ اللَّهَ 

قَدْ أَمَرَكِ أَنْ تَقِرِّي فِي بَيْتِكِ. تفسيرالقرطبي

ஜமல் போரின் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் வீட்டைவிட்டும் வெளியேறிய போது அம்மார் (ரலி) அவர்கள் ‘நிச்சயமாக அல்லாஹ் உங்களை உங்ளுடைய வீடுகளிலேயே தங்கியிருங்கள் என்று ஏவியிருக்கிறான்’ என்றார்கள். இதன் காரணமாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அழக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரே ஒருதடவை நிற்பந்த சூழ்நிலையில் வீட்டை விட்டும் வெளியேறியதற்க்கு காலமெல்லாம் கண்கலங்கினார்கள் என்றால் இன்றைய இஸ்லாமியப் பெண்கள் காலமெல்லாம் சுற்றித்திரிந்தும் ஒருமுறை கூட கண் கலங்கினார்களா? இல்லை. மாறாக ஆற்பாட்டம், போராட்டம், மறியல், போன்ற மார்க்கம் தடைசெய்த செயல்களுக்காக அன்னிய ஆண்களுடன் ஆனந்தமாக அலைகின்றார்கள். இதன் மூலமாக இறை கட்டளைக்கு மாறு செய்கிறோம் என்பதை இன்றைய இஸ்லாமியப் நாகரீக பெண்கள் உணர்ந்துகொள்வார்களா?

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...