Monday, 28 January 2013

எல்லோரும் போற்றும் இறை தூதரே! மவ்லித்:

அல்லாஹ்வின் தூதே!அருள் தீபமே!
எங்கள் யாநபீ-எங்கள் யாஹபீப்!
எல்லோரும் போற்றும் இறை தூதரே!
எங்கள் யாநபீ!எங்கள் யாஹபீப்!
********
அந்நாளிலே மாந்தர் திசை மாறினார்,
எந்நாளுமே தீய வழிதன்னிலே
பாவங்களில் மூழ்கி தடுமாறினார்,
ஏனென்று கேட்க்க எவர் நாடினார்.
அருளாக வந்தீரே அண்ணல் நபி!
அண்ணல் யாநபி!அன்பே யாஹபீப்!
**********
தாயிஃப் நகரத்து வீதியிலே,
தடியர்கள் உம்மேனியைத்தாக்கினர்,
செங்குருதி உங்கள் செம்மேனியில்
சிந்திட நீர் மயங்கி வீழ்ந்தீர்களே!
கண்கள் கலங்குது கருணை நபி!
கண்கள் தேடுதே எங்கள் யாஹபீப்!
***********
ஷுஃபே அபீதாலிபில் வாடினீர்!
சருகுகளைக் கொண்டு பசியாரினீர்!
பாலின்றி பதறிய குழந்தைகளின்
நிலையினைப் பார்த்தே நீர் கண்ணீர் சொரிந்தீர்
நினைத்தாலே உள்ளம் அழுகின்றது
உண்மை யாநபீ!எங்கள் யாஹபீப்!
**********
சுடு பாலை மணல் மீது நான் ஓடவா?
சுந்தர பூங்காவில் நான் தேடவா?
புதர் நிறைந்த மலை மீது நான் பார்க்கவா?
பாய்கின்ற கண்ணீரை அணை போடவா?
அன்பாலே உள்ளம் அலை வீசுதே!
அன்பே யாநபி!அண்ணல் யாஹபீப்!

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...