Wednesday, 9 January 2013

இந்து சமுதாயத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ்

காந்தியைக் கொன்றவர்கள் எங்களுக்கு நாட்டை நேசிக்கக் கற்றுத்தர தேவையில்லை: எம்.பி. ஒவைசி

ஹைதராபாத்: மதக் கலவரத்துக்கு இந்து சமுதாயத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுத்தீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் நகரில் கடந்த மாதம் 24ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ. அக்பருத்தீன் ஒவைசி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது சகோதரர் ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுத்தீன் ஒவைசி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள டண்டூரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் எதிரிகள் காங்கிரஸும், பாஜகவும் தான். இது என் நாட்டு. என் நாட்டை நான் நேசிக்கிறேன். எனது தாய்நாட்டை நேசிப்பது எப்படி என்று காந்தியைக் கொன்றவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள், குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றவர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை.

காங்கிரஸுக்கு நாங்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆந்திர அரசு வேண்டும் என்றே எனது சகோதரர் மீது வழக்குகள் போடுகிறது. ஆனால் இந்திய சட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அக்பருத்தீன் சட்டத்தில் இருந்து ஓடிவிட மாட்டார். இந்து சமுதாயத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...