Saturday, 9 March 2013

தினம் ஒரு ஹதீஸ்,

நீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து விட்டு பின்னர்
வலது புறமாக சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவை ஓது! நீ ஓதுவதில் கடைசியாக
இது இருக்கட்டும்.

இதை ஓதி விட்டும் படுத்து அன்று இரவே நீ மரணித்து விட்டால் ஈமானுடன்
மரணித்தவனாவாய் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 247, 6313, 6315, 7488, 6311, 7488

அந்த துஆ இது தான்.

اَللّهُمَّ أَسْلَمْتُ وَجْهِيْ إِلَيْكَوَفَوَّضْتُ أَمْرِيْ إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِيْ إِلَيْكَ رَغْبَةًوَرَهْبَةً إِلَيْكَ لاَ
مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَاَللّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِيأَرْسَلْتَ

அல்லாஹும்ம அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க, வப[F]வ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க, வஅல்ஜஃ(த்)து
ளஹ்ரீ இலை(க்)க, ரஃக்ப(B](த்)தன் வரஹ்ப(B](த்)தன் இலை(க்)க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்(க்)க
இல்லா இலை(க்)க அல்லாஹும்ம ஆமன்(த்)து பிகிதாபி(B](க்)கல்லதீ அன்ஸல்(த்)த
வபி(B]நபி(B]ய்யிகல்லதீ அர்ஸல்(த்)த

இதன் பொருள்:

இறைவா! என் முகத்தை உனக்குக் கட்டுப்படச் செய்து விட்டேன். என் காரியத்தை உன்னிடம்
ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். (உனது அருளில்) நம்பிக்கை
வைத்து விட்டேன். (உனது தண்டனைக்கு) அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க உன்னை
விட்டால் வேறு போக்கிடம் ஏதும் இல்லை. இறைவா! நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய
நபியையும் நம்பினேன்.http://www.facebook.com/patema.sunnathjamath

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...