Thursday, 18 April 2013

நோட்டீஸ் க்கு பதிலடி

தவ்ஹீத் என்று சொல்ல கூடிய நபர்கள் நமது  ஊரில் நோட்டீஸ் அடித்து கொடுத்து ஓய்ந்து இருப்பார்கள் போல் .இவர்கள் கூறும் பொய்களுக்கு  அளவே இல்லை இதற்கு முன் கொடுத்த நோட்டீஸ்யில் மிக அதிகமாக உளறல் கள் தான் இருந்தது இவர்களின் நோட்டீஸ் க்கு நாம் பதிலடி கொடுத்து உள்ளோம் .இன்ஷா அல்லா  இனிமேலாவது திருந்துவார்களா என்று பார்போம் . 

Monday, 1 April 2013

பேட்மா செய்திகள்,

தவ்ஹீத் என்று சொல்ல கூடிய நபர்கள் நமது  ஊரில் நோட்டீஸ் அடித்து கொடுத்து ஓய்ந்து இருப்பார்கள் போல் .இவர்கள் கூறும் பொய்களுக்கு  அளவே இல்லை இதற்கு முன் கொடுத்த நோட்டீஸ்யில் மிக அதிகமாக உளறல் கள் தான் இருந்தது இவர்களின் நோட்டீஸ் க்கு நாம் பதிலடி கொடுத்து உள்ளோம் .இன்ஷா அல்லா  இனிமேலாவது திருந்துவார்களா என்று பார்போம் . 


Saturday, 9 March 2013

தினம் ஒரு ஹதீஸ்,

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

33:28. நபியே! உம்முடைய மனைவிகளிடம்: “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.

33:29. “ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக!

33:30. நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!

33:32. நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.

3:33. (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.

:34. மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சுமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.

33:55. (நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.http://www.facebook.com/patema.sunnathjamath

தினம் ஒரு ஹதீஸ்,

நீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து விட்டு பின்னர்
வலது புறமாக சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவை ஓது! நீ ஓதுவதில் கடைசியாக
இது இருக்கட்டும்.

இதை ஓதி விட்டும் படுத்து அன்று இரவே நீ மரணித்து விட்டால் ஈமானுடன்
மரணித்தவனாவாய் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 247, 6313, 6315, 7488, 6311, 7488

அந்த துஆ இது தான்.

اَللّهُمَّ أَسْلَمْتُ وَجْهِيْ إِلَيْكَوَفَوَّضْتُ أَمْرِيْ إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِيْ إِلَيْكَ رَغْبَةًوَرَهْبَةً إِلَيْكَ لاَ
مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَاَللّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِيأَرْسَلْتَ

அல்லாஹும்ம அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க, வப[F]வ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க, வஅல்ஜஃ(த்)து
ளஹ்ரீ இலை(க்)க, ரஃக்ப(B](த்)தன் வரஹ்ப(B](த்)தன் இலை(க்)க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்(க்)க
இல்லா இலை(க்)க அல்லாஹும்ம ஆமன்(த்)து பிகிதாபி(B](க்)கல்லதீ அன்ஸல்(த்)த
வபி(B]நபி(B]ய்யிகல்லதீ அர்ஸல்(த்)த

இதன் பொருள்:

இறைவா! என் முகத்தை உனக்குக் கட்டுப்படச் செய்து விட்டேன். என் காரியத்தை உன்னிடம்
ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். (உனது அருளில்) நம்பிக்கை
வைத்து விட்டேன். (உனது தண்டனைக்கு) அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க உன்னை
விட்டால் வேறு போக்கிடம் ஏதும் இல்லை. இறைவா! நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய
நபியையும் நம்பினேன்.http://www.facebook.com/patema.sunnathjamath

தினம் ஒரு ஹதீஸ்

அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், 'யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது 'அலக்' (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது' என்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி;318.

Sunday, 10 February 2013

PJ Thola Mattar Unarvu Pathirikkai Nirubar Pakiranga Vakkumoolam

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 9 வகை மூலிகைகள் கொண்ட நீல வேம்பு குடிநீர் என்ற மருந்து கண்டறியப்பட்டுள்ளது.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 9 வகை மூலிகைகள் கொண்ட நீலவேம்பு குடிநீர் என்ற மருந்தை  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 

பேட்மா நகரதில் இன்று வழங்கியது இதில் ஆயிரதிற்கு மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு பயன்அடைந்தனர் .





linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...