சென்னை, ஜன.7- இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அமைப்பான முஸ்லிம் யூத் லீகின் தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட, நகர அளவிலான அமைப்புக் குழு கூட்டம் ஜனவரி 12-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் நடை பெறுகிறது.
இது தொடர்பாக முஸ்லிம் யூத் லீகின் தமிழ்நாடு மாநில செயலாளர் பள்ளபட்டி எம்.கே. முஹம்மது யூனூஸ் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கூட்டம் கோழிக்கோட்டில் நடைபெற்ற போது முஸ்லிம் யூத் லீக் அமைப்புப் பணிகளை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தி விரைவுபடுத்த வேண்டும் என்றும், தேசிய அளவில் இதன் மாநாட்டை நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்து அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் முஸ்லிம் யூத் லீக் பணிகள் முடுக்கி விடப்பட்டுள் ளன.
தமிழகத்தில் முஸ்லிம் யூத் லீகின் மாநில, மாவட்ட, நகர அளவிலான அமைப்புக்குழு கூட்டம் ஜனவரி 12-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவில் உள்ள அன்னை ஆயிஷா மஹாலில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment