காயல்பட்டினத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் துறை நல்லுறவுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ஏ,அப்பாஸ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜி.கண்ணன், துணைச் செயலர் ஏ.பஷீர் அஹமது, மாவட்ட அமைப்பாளர் யு.கே.பிலால் ஆசாத்,மாவட்டச் செயலர் ஏ.பி.ஆரீப் மற்றும் நகரத் தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்த காவல்துறையினருடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். பாலியல் பலாத்கார குற்றங்களை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உடன்குடியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டப் பொருளாளர் ஏ.பி.முகமது மைதீன் வரவேற்றார். நகர துணைச் செயலர் பி.ஆத்திமுத்து நன்றி கூறினார்.
No comments:
Post a Comment