Monday, 21 January 2013

தினம் ஒரு ஹதீஸ்,

புறம் பேசித் திரிபவருக்குக் கேடு தான்

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் :

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். 
(104:01).

கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்கிறார்கள். அப்போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. இவ்விருவரில் ஒருவர் தான் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை. மற்றொருவர் கோள் சொல்லித் திரிபவராக இருந்தார் எனக் கூறி விட்டு, ஒரு பசுமையான பேரித்த மட்டையைக் கொண்டு வரச் சொல்லி, அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை நட்டினார்கள். அதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள் என்று கேட்கப்பட்ட போது, அந்த இரு மட்டைத்துண்டுகளும் காயாமல் இருக்கும் பொழுதெல்லாம், அந்த இருவரின் வேதனை குறைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

நாவிற்கு நரம்பில்லை என்பதற்காக.., நாம் எப்படி வேண்டுமானாலும் வளைத்துப் பேசலாம் என்று எண்ணுபவர்கள் பலர். அல்லாஹ் கூறுகிறான் :

பொய்யான சொல்லை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அல்குர்ஆன்
(22:30)

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...